வருகிற 11-ம் தேதி முதல் ‘24’ திரைப்படத்தை காண வரும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் ஒரு மேஜிக் வாட்ச் இலவசமாக வழங்கப்படுகிறது.
சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘24’.
இப்படத்தில் கைக்கடிகாரத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கருவியான அந்த கைக் கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக்கியமாக குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தங்கள் குடும்பத்தோடு படத்தை பார்க்க வரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அந்த ‘24’ படத்தின் புதிய டிஸைன் கைக்கடிகாரம் பற்றி கேட்டு ஆர்வமாக தெரிந்து கொள்கிறார்கள்.
விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருகிற 11-ம் தேதி முதல் ‘24’ திரைப்படத்தை காண வரும் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மேஜிக் வாட்ச் வழங்கப்படும் என்று தயாரிப்பாளர் சூர்யா அறிவித்துள்ளார்.