“தப்பான படத்துக்கு ஆதரவு கொடுக்காதீங்க..” – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்..!

“தப்பான படத்துக்கு ஆதரவு கொடுக்காதீங்க..” – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்..!

சூரியா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் k.குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘24’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

IMG_6725

இந்த விழாவில்  சூர்யா, இயக்குநர் விக்ரம் குமார், இசைப் புயல் A.R.ரஹ்மான், ஞானவேல் ராஜா, நித்யா மேனன், சிவக்குமார், கார்த்தி. கவிபேரரசு வைரமுத்து, சரண்யா பொன்வண்ணன், மதன் கார்க்கி. சின்மயி, இயக்குநர் ஹரி உள்ளிட்ட மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்ப்பு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் உழைத்த உழைப்புக்கான பலன் இது எனலாம். வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அழகான பாதையை அமைத்து கொடுத்தது ரசிகர்கள்தான்.  

சரியான படம் பண்ணினால் வெற்றி பெற வைங்க.. தப்பான படத்தை நானே பண்ணினால்கூட ஆதரிக்காதிங்க.. அப்படி தப்பான படத்தை நீங்க ஆதரிக்காமல் இருந்தால்தான் நாங்கள் நல்ல கதையை தேடி பிடித்து சிறந்த படத்தில் நடிக்க முடியும். உங்களை மகிழ்விக்கவும் முடியும்.

இப்படத்தில் நான் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறேன். இயக்குநர் விக்ரம் குமார் மிகச் சிறந்த இயக்குநர், அவர் படத்தின் கதையை நான்கு மணி நேரம் என்னிடம் கூறி முடித்ததும் நான் கை தட்டி ரசித்தேன். ரஹ்மானிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பேசலாம். அவர் மிகப் பெரிய உச்சங்களை தொட்டும் எளிமையாக இருக்கிறார். படத்தின் கதையை கேட்க வேண்டும் என்று ரஹ்மானிடம் நான் கூறியதும்  முதலில் அரை மணி நேரம் கதை கேட்க நேரம் ஒதுக்கிய அவர், கதை பிடித்துப் போய் ஆறு மணி நேரம் கேட்டார். ‘இந்தப் படம் ஒரு லட்சிய படைப்பு’ என்று ரஹ்மான் ஸார் என்னிடம் கூறினார்.

சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை பற்றி அறிந்ததும் நான் மிகவும் வருந்தினேன். மனசு வலித்தது. எல்லாருக்கும் நேரம் இருக்கு. நல்ல நேரம் வரும். கல்லூரியில் படிக்கும்போது நானும் எதுவும் செய்யாமல்தான் இருந்தேன். ஆனால் நான் இங்கு இப்படி நின்று பேசுவதற்கு காலம்தான் காரணம்..” என்றார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, “நான் சமீபத்தில் கேட்ட கதைகளிலேயே இப்படத்தின் கதைதான் மிகச் சிறந்தது என்பேன். நான் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆற்றலை கண்டு மிகவும் வியந்தேன். 2டி-யும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இனைந்து தற்போது மிகச் சிறந்த பிரம்மாண்ட படைப்பை வெளிக்கொண்டுள்ளது..” என்றார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “நான் இப்படத்தில் இன்னும் பணியாற்றிக்கொண்டு இருப்பதால் என்னால் இப்படத்தை பற்றி பேச இயலாது. உங்கள் ஆதரவுக்கு நன்றி…” என்றார்.

விழாவில் இந்தப் படத்திற்காக இசைப் புயல் A.R. ரஹ்மானின் இசையில் நடிகை நித்யா மேனன்  பாடிய பாடலை தெலுங்கில் பாடினார். இப்பாடல் அரங்கத்தில் இருந்தவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது..

Our Score