2018-ம் ஆண்டில் வெற்றி, தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2018-ம் ஆண்டில் வெற்றி, தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2018-ம் ஆண்டில் வெளியான 183 படங்களில் லாபம் அடைந்து வெற்றியைத் தொட்டத் திரைப்படங்கள் பற்றிய உண்மையான விவரங்கள் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பல திரைப்படங்களுக்கு அவைகள் வெளியான பின்பு உடனேயே சக்ஸஸ் மீட் நடத்தி அத்திரைப்படம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு சக்ஸஸ் கூட்டத்திலும் அத்திரைப்படத்தின் வரவு – செலவு கணக்குகள் மக்கள் முன் வைக்கப்படவில்லை.

தங்களுடைய படம் வெற்றியடைந்து எத்தனை கோடி அல்லது எத்தனை லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது என்பதை இதுவரையிலும் எந்தவொரு வெற்றி படத் தயாரிப்பாளரும் வெளிப்படையாக முன் வந்து சொன்ன சரித்திரமே தமிழ்த் திரையுலகத்தில் இல்லை.

திரையுலக வரவு, செலவு கணக்கும் மற்றைய துறைகளிலிருந்து சற்று வித்தியாசமானது. திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் அதனை திரையரங்குகளுக்குக் கொண்டு செல்லும்போது இடையில் விநியோகஸ்தர், திரையரங்குகள் ஆகிய இரண்டு முக்கிய நட்புகளிடத்தில் தனது வசூல் தொகையைப் பகிர்ந்து கொள்ளாக வேண்டும்.

ஒரு திரைப்படம் 10 கோடியில் படமெடுத்து அது திரைக்கு வருகிறதெனில் தியேட்டர் கலெக்சனில் மட்டுமே 16 கோடி ரூபாயாக வசூலித்துக் கொடுத்தால்தான் அந்த 10 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். மீதமிருக்கும் 6 கோடி ரூபாயை தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் தங்களுக்கென்று பிரித்துக் கொள்வார்கள். இதுதான் இப்போதைய யதார்த்தமான நடைமுறைக் கணக்கு.

வாங்கி வெளியிட்டமைக்காக, அல்லது தியேட்டர் வாடகைக்காக, அல்லது ஷேர் என்கிற வியாபாரத்திற்காக என்று பன்முக வரவு, செலவு கணக்குப் பிரிப்புகள் இவர்களுக்கிடையில் இருப்பதால் இவர்கள் யாருமே உண்மையான வசூல் தொகையை வெளிப்படையாகச் சொல்வதில்லை என்பதுதான் உண்மை.

ஆகவே நாமும் பலரைப் போலவே நமது இத்தனையாண்டு கால சினிமா துறை அனுபவத்தின் அடிப்படையில் அந்தத் திரைப்படம் வெளியான பின்பு பற்றி நமக்குக் கிடைத்தத் தகவல்களை வைத்து அனுமானத்தின் அடிப்படையில் இந்த வெற்றி, தோல்வி படங்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம்.

தியேட்டர் கட்டணங்கள் மட்டுமில்லாமல் மற்றைய அனைத்துப் பிரிவு விற்பனைகள் மூலம் கிடைத்திருக்கும் பணத்தையும் மனதில் கொண்டு, ‘தயாரிப்புச் செலவைத் தொட்டிருந்தாலே அது வெற்றிப் படம்தான்’ என்கிற ஒரேயொரு இயற்கை நீதியின் அடிப்படையில்,  கீழ்க்கண்ட திரைப்படங்கள் வெற்றிப் பெற்ற படங்களின் பட்டியலில் தேர்வு பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியல் :

 1. டிக் டிக் டிக்
 2. இருட்டு அறையில் முரட்டுக் குத்து
 3. இரும்புத்திரை
 4. நாச்சியார்
 5. தானா சேர்ந்த கூட்டம்
 6. கலகலப்பு-2
 7. கடைக்குட்டி சிங்கம்
 8. தமிழ்ப் படம்-2
 9. கோலமாவு கோகிலா
 10. இமைக்கா நொடிகள்
 11. சர்கார்
 12. மேற்குத் தொடர்ச்சி மலை
 13. ராட்சசன்
 14. பியார் பிரேமா காதல்
 15. 96
 16. பரியேறும் பெருமாள்
 17. செக்கச் சிவந்த வானம்
 18. 2.0
 19. கனா
 20. மாரி-2
 21. அடங்க மறு

எப்படியிருந்தாலும் தயாரிப்புச் செலவைத் திரும்பவும் பெற்றிருக்காது என்று தோணும் பிரபலமான, பெரிய ஹீரோக்கள் நடித்த, பெரிய இயக்குநர்கள் இயக்கி, பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த கீழ்க்கண்ட திரைப்படங்கள் தோல்வி படங்களாக கருதப்பட்டு அவைகள் இந்தத் தோல்வி பட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தோல்வியடைந்த பிரபலமான படங்களின் பட்டியல் :

1.நிமிர்

 1. ஸ்கெட்ச்
 2. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
 3. காளி
 4. குலேபகாவலி
 5. ஜூங்கா
 6. பாஸ்கர் ஒரு ராஸ்கல்
 7. மதுர வீரன்
 8. தியா
 9. லட்சுமி
 10. ஜருகண்டி
 11. மோகினி
 12. திமிரு புடிச்சவன்
 13. நோட்டா
 14. விஸ்வரூபம்-2
 15. அசுரவதம்
 16. காலா
 17. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு
 18. சீதக்காதி

இந்த இரண்டு பட்டியல்களைத் தவிர திரைக்கு வந்த மற்றைய அனைத்துத் நேரடி தமிழ்ப் படங்களும் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கின்றன என்றே எடுத்துக் கொள்ளலாம்.

Our Score