2018-ல் அதிகமான தமிழ்ப் படங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பட்டியல்

2018-ல் அதிகமான தமிழ்ப் படங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பட்டியல்

2018-ம் ஆண்டில் வெளிவந்த 183 நேரடி தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடித்த திரைப்படங்களின் பட்டியல் இது :

2018-ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த கதாநாயகர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘ஜூங்கா’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘96’, ‘சீதக்காதி’ ஆகிய 5 படங்களில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இவருக்கு அடுத்து நடிகர்கள் பிரபுதேவா, கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு ஆகிய மூவரும் தலா 3 படங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் பிரபுதேவா ‘மெர்க்குரி’, ‘சில சமயங்களில்’, ‘லஷ்மி’ ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் கவுதம் கார்த்திக் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விக்ரம் பிரபு ‘பக்கா’, ‘60 வயது மாநிறம்’, ‘துப்பாக்கி முனை’ ஆகிய 3 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

?????????????????????????????????????????????????????????

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘காலா’, ‘2.0’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் சீயான் விக்ரம்  ‘ஸ்கெட்ச்’, ‘சாமி-2 ஸ்கொயர்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் ‘வட சென்னை’, ‘மாரி-2’ ஆகிய 2 தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஷால் ‘இரும்புத்திரை’, ‘சண்டக்கோழி-2’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் டிக்’, ‘அடங்க மறு’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் ‘ராட்சசன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் அரவிந்த்சாமி ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் அதர்வா ‘செம போத ஆகாதே’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஜய் ஆண்டனி ‘காளி’, ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய 2 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் ஜெய் ‘கலகலப்பு-2’, ‘ஜருகண்டி’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விமல் ‘மன்னர் வகையறா’, ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் தினேஷ் ‘அண்ணனுக்கு ஜே’, ‘களவாணி மாப்பிள்ளை’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ஜீவா நடிப்பில் ‘கலகலப்பு-2’, ‘தமிழ்ப் படம்-2’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் ‘நாச்சியார்’, ‘செம’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விதார்த் ‘வண்டி’, ’காற்றின் மொழி’ ஆகிய படங்களில் நாயகனாகவும், ‘பில்லா பாண்டி’ படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் துவக்கி அதில் தீவிரமாக ஈடுபட்டதால் இந்தாண்டு அவருடைய படமாக ‘விஸ்வரூபம்-2’ படம் மட்டுமே வெளிவந்துள்ளது.

நடிகர் விஜய்யின் நடிப்பில் ‘சர்கார்’ என்ற ஒரேயொரு படம் மட்டுமே வெளியாகி பத்து மடங்களுக்கான விளம்பரத்தையும், பரபரப்பையும் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற ஒரேயொரு படம் மட்டுமே இந்தாண்டு வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றொரு பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியானது.

நடிகர் சிம்பு ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார். கூடவே ‘காற்றின் மொழி’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார்.

நடிகர் ஆர்யா ‘கஜினிகாந்த்’ என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். கூடவே அவர் தயாரித்த ‘கனா’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘நிமிர்’ என்ற ஒரேயொரு படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகைகளைப் பொறுத்தமட்டில் ஐஸ்வர்யா ராஜேஷூம், வரலட்சுமியும் தலா 5 படங்களில் நடித்து இந்தாண்டுக்கான லிஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளனர்.

Tamil-Actresses-1

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘லஷ்மி’, ‘சாமி-2’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘வட சென்னை’, ‘கானா’ ஆகிய 5 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை வரலட்சுமி ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘சண்டக்கோழி-2’, ‘சர்கார்’, ‘மாரி-2’ ஆகிய 5 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சீமராஜா’, ‘சண்டக்கோழி-2’, ‘சர்கார்’ ஆகிய 4 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை சமந்தா ‘இரும்புத்திரை’, ‘யு டர்ன்’, ‘சீமராஜா’ ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை சாயிஷா ‘கஜினிகாந்த்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’ ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஜோதிகா ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நயன்தாரா  ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை திரிஷா ‘மோகினி’, ‘96’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ரெஜினா கேஸண்ட்ரா ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை அமலா பால் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘ராட்சசன்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நிக்கி கல்ராணி ‘பக்கா’, ‘கலகலப்பு-2’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி ‘தியா’, ‘மாரி-2’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஆனந்தி ‘மன்னர் வகையறா’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நந்திதா ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘அசுரவதம்’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார். கூடவே ‘கலகலப்பு-2’  படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ஆண்ட்ரியா ‘விஸ்வரூபம்-2’, ‘வட சென்னை’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஹன்சிகா ‘குலேபகாவலி’, ‘துப்பாக்கி முனை’ ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை அஞ்சலி ‘காளி’ படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.

நடிகை கேத்தரின் தெரசா ‘கலகலப்பு-2’ என்ற 1 படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.

நடிகை தமன்னா ‘ஸ்கெட்ச்’ படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகர்களில் யோகி பாபுதான் இந்தாண்டு டாப் லிஸ்ட்டில் இருக்கிறார். கிட்டத்தட்ட  20 படங்களில் அவர் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தை ‘மொட்டை’ ராஜேந்திரன் பிடித்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகைகளில் மதுமிதா 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

tamil-music-directors-2

இசையமைப்பாளர்களில் சி.எஸ்.சாம் முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஒரே வருடத்தில் 9 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

‘தியா’, ‘கடிகார மனிதர்கள்’, ‘கொரில்லா’, ‘6 அத்தியாயம்’, ‘வஞ்சகர் உலகம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘லஷ்மி’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘அடங்க மறு’ ஆகிய 9 படங்களுக்கு சி.எஸ்.சாம் இசையமைத்திருக்கிறார்.

இவருக்கு அடுத்து யுவன் சங்கர் ராஜா 5 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘இரும்புத்திரை’, ‘பியர் பிரேமா காதல்’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘சண்டக்கோழி-2’, ‘மாரி-2’ ஆகிய 5 படங்களே அவை.

இசைஞானி இளையராஜா ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘நாச்சியார்’, ‘60 வயது மாநிறம்’ ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

டி.இமான் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘சீமராஜா’ ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் ‘பரியேறும் பெருமாள்’, ‘வட சென்னை’, ‘கனா’ ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் ‘செக்கச் சிவந்த வானம்’, ‘சர்கார்-2’ ஆகிய 2 படங்களுக்கு இசையமைத்தார்.

அனிருத் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய 2 படங்களுக்கு இசையமைத்தார்.

ஜிப்ரான், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் தலா 1 படத்திற்கே இசையமைத்துள்ளனர்.

Our Score