full screen background image

2015 – தமிழ்த் திரைப்படங்கள் – வசூல் நிலவரம்..!

2015 – தமிழ்த் திரைப்படங்கள் – வசூல் நிலவரம்..!

2015-ம் ஆண்டில் உண்மையாகவே எந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது.. எது லாபத்தை சம்பாதித்தது..? எது நஷ்டத்தைக் கொடுத்தது என்பதை மிக உறுதியாக யாராலும் சொல்ல முடியாது. இது தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய நிலைமை.

எந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இதுவரையிலும் தன்னுடைய படத்தின் தயாரிப்புச் செலவு, லாப, நஷ்ட கணக்கை உண்மையாக, வெளிப்படையாகச் சொன்னதே இ்லலை. அவர்களே சொன்னால் மட்டுமே இது சாத்தியமானது.

இந்த நிலையில் தியேட்டர் வசூலை பொறுத்தவரையில் 99 சதவிகிதம் உறுதிப்படுத்திச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அது படங்களை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், விநியோகஸ்தர்கள் சங்கத்தினரும் இந்தத் தகவலை அவ்வப்போது வெளியிட்டுதான் வருகிறார்கள்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தரும, tamilnaduentertainment பத்திரிகையின் ஆசிரியருமான ராமானுஜம்தான் திரையுலகில் ஒவ்வொரு வருடத்திய வெற்றி, தோல்வி படங்களை விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் சென்ற 2015-ம் ஆண்டில் லாபம் சம்பாதித்த படங்கள், நஷ்டமடைந்த படங்கள் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறார் ராமானுஜம். 

குறைந்த பட்ஜெட் – நிறைய லாபம்

டார்லிங்

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்

36 வயதினிலே

டிமான்டி காலனி

49-ஓ

த்ரிஷா இல்லனா நயன்தாரா

இன்று நேற்று நாளை

மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் ஐந்து கோடி பட்ஜெட்டுக்குள் தயாராகி தியேட்டர் வசூல், வெளிநாட்டு வியாபாரம், ரீமேக் உரிமை, தொலைக்காட்சி உரிமை, வெளி மாநில வினியோக வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் படத்தின் முதலீடு, அதற்கு இணையாக லாபத்தையும் தயாரிப்பாளர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்த படங்களாகும்.

பெரிய பட்ஜெட் குறைவான லாபம்

கொம்பன்

ஓ காதல் கண்மணி

பாபநாசம்

மாரி

மாயா

நானும் ரௌடிதான்

ஈட்டி

ரோமியோ ஜுலியட்

காக்கி சட்டை

மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் ஐந்து கோடிக்கு மேல் 25 கோடிக்குள்ளான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள். தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்குகள் என முத்தரப்பினருக்கும் லாபத்தைப் பெற்றுத் தந்த படங்களாகும்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பைசாவுக்கு பைசா லாபத்தைத் தந்ததைப் போன்று மேற்கண்ட பெரிய பட்ஜெட் படங்கள் பிரம்மாண்டமான லாபத்தை வணிக ரீதியாகத் தரவில்லை.

மெகா பட்ஜெட், மெகா லாபம்

காஞ்சனா 2

பாகுபலி

தனி ஒருவன்

வேதாளம்

காஞ்சனா 2

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படத்தைப் பார்க்க தமிழகத் திரையரங்குகளில் மக்கள் கூட்டமாகத் திரண்டனர்.

டிக்கட் கட்டணம், பராமரிப்பு இல்லாத திரையரங்குகள் காரணமாக குடும்பத்துடன் படம் பார்க்க மக்கள் வருவதில்லை என திரைப்படத் துறையினர் கூறி வந்த காரணங்களை தூக்கி எறிந்த படம் ‘காஞ்சனா 2’.

சென்னை முதல் கன்னியாகுமரிவரை படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் குடும்பங்களோடு அதிக மக்கள் பார்த்த ஒரே படம் ‘காஞ்சனா 2’. குறைவான கட்டணத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்து, இரட்டிப்பு லாபத்தையும் இந்தப் படம் ஈட்டியது.

பாகுபலி

தமிழ், தெலுங்கில் தயாராகி வெளியான ‘பாகுபலி’ தமிழகத் திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்தது. குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை டப்பிங் படம் என்பதை மறந்து பார்த்தனர். வசூலிலும் பெரும் லாபத்தை வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் பெற்றுத் தந்த படம்.

தனி ஒருவன்

30 கோடி பட்ஜெட்டில் தயாராகி வெளியான இப்படம் முதல் நாளில் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் ஜெட் வேகத்தில் வசூலை வாரிக் குவித்தது.

ஜெயம் ரவி நடித்து வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்ற ‘ரோமியோ ஜுலியட்’ படத்தைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்’ வெளியானதால் இப்படத்திற்கு ஓபனிங்கும் இருந்தது.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரித்து வெளியிட்ட படங்களில் அந்நிறுவனத்திற்கு லாபத்தை தந்த முதல் படம் ‘தனி ஒருவன்’தான்.

வேதாளம் 

2015 தீபாவளி அன்று வெளியான ‘வேதாள’த்திற்குப் போட்டியாக கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ வெளியானது. முதல் நாளிலேயே ‘தூங்காவனம்’ வசூல் முடங்கிப் போனது. ‘வேதாளம்’ வசூலில் அசுர வேட்டையாடியது.

குறைந்தபட்ச டிக்கெட் நகர்ப்புற தியேட்டர்களில் 500 ரூபாய் முதல் விற்கப்பட்டது. புறநகர் பகுதிக தியேட்டர்ளில் 150 முதல் 1000 ரூபாய்வரை முதல் நான்கு நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இளைஞர்கள், மாணவர்கள் டிக்கெட் கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் படம் பார்க்க வந்ததால் முதல் வாரத்திலேயே தமிழகத்தில் மொத்த வசூல் 40 கோடியைத் தொட்டது.

கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாகி குறுகிய நாட்களில் அதிக வசூல் ஈட்டிய படமான ‘துப்பாக்கி’ செய்த சாதனையை சமன் செய்தது ‘வேதாளம்’ வசூல்.

தமிழ்நாட்டில் ‘துப்பாக்கி’ பட வசூலை 90 ஊர்களில் ‘வேதாளம்’ முறியடித்து முன்னேறியது. நான்கு வாரங்களில் டிக்கட் விற்பனையில் மட்டும் 100 கோடியைத் தாண்டியது. குறைவான பார்வையாளர்கள், அதிகமான வசூல் என்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.

நஷ்டத்தைக் கொடுத்த படங்கள் 

உத்தமவில்லன்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை

எலி

வாலு

பாயும் புலி

புலி

ருத்ரமாதேவி

10 எண்றதுக்குள்ள

தூங்காவனம்

இஞ்சி இடுப்பழகி

தங்கமகன்

அனேகன்

என்னை அறிந்தால்

மாசு என்கிற மாசிலாமணி

சகலகலா வல்லவன்

நண்பேன்டா

ஆம்பள

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

நன்றி : திரு.ராமானுஜம்

www.tamilcinemaboxoffice.com

Our Score