“2.0 தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்கும்…” – ரஜினியின் நம்பிக்கை பேச்சு..!

“2.0 தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்கும்…” – ரஜினியின் நம்பிக்கை பேச்சு..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்ப ர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக  பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியிருக்கிறது.  இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, கலை இயக்குநர் முத்துராஜ், படத் தயாரிப்பாளர் தாணு, மற்றும்சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த 2.0 படத்தில் இதுவரை எந்தவொரு இந்திய படங்களிலும் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் ஷங்கர், உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் பதிலளித்தனர்.

2 point 0 Trailer launch (6)

விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது, “இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. 7, 8 டேக்கெல்லாம் வாங்க ஆரம்பித்தேன். இது எனக்கு பயத்தைக் கொடுத்தது. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன்.

ஆனால், ஷங்கர் விடவில்லை. ‘நீங்கதான் நடிக்கணும். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நீங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக் கொள்கிறேன். இப்போது நீங்கள் இல்லாத காட்சிகளை எடுத்துக் கொள்கிறேன்..’ என்றார்.

அப்படியும் எனக்கு திருப்தியாகவில்லை. அப்போது ஒரு நாள் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்னை பார்க்க வந்தார். அவரிடமும் நான் இதையேதான் சொன்னேன். உடனே அவர் உடன் வந்தவர்களையெல்லாம் அறையைவிட்டு வெளியேறச் சொல்லிவிட்டு என் கையைப் பிடித்துக் கொண்டு ‘இந்தப் படம் எனக்கு முக்கியமே இல்லை.. நீங்கள்தான் எனக்கு முக்கியம். உடம்பை சரியாக்கிட்டு வாங்க.. எத்தனை வருஷமானாலும் நான் காத்திருக்கிறேன்..’ என்றார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம். சுபாஷ்கரன் கோஹினூர் வைரம் மாதிரி..!

2 point 0 Trailer launch (8)

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜட்டில் துவங்கியது. கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது. கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும். இப்போது தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியிருக்கிறது.

எப்போது வரணும் என்பது முக்கியமல்ல. வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரணும். வந்தாலும் சொல்லியடிக்கணும்.. இந்தப் படம் நிச்சயமா ஜெயிக்கும்.. இங்கே இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்து கூறிய எனது நண்பர் கமல்ஹாசனுடன் ஷங்கர் செய்யப் போகும் ‘இந்தியன் -2’ படமும் மாபெரும் வெற்றியைப் பெரும்… என்றார்.

2point0 (4)

இயக்குநர் ஷங்கர் பேசும்போது, “2.O திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்சய் குமார் இருவரும் கடுமையாக உழைத்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமாக்ஸ் காட்சிக்காக டெல்லிக்கு வந்து நடித்துக் கொடுத்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது..” என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் பேசும்போது, “ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரது கடின உழைப்பு இந்த வயதிலும்கூட. அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசினார்.

விழாவில் அக்‌ஷய் குமார் பேசும்போது, “ரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி…”  என்றார்.

2 point 0 Trailer launch (7)

விழாவில் எமி ஜாக்சன்  பேசும்போது, “இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி..” என்றார்.

சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி பேசும்போது, “இவ்வளவு பெரிய படத்தில் பணிபுரிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது. இயக்குனர் ஷங்கர், ரஜினி சார், அக்சய் சார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்…” என பேசினார்.

விழாவில் கிராபிக்ஸ் டிஸைனர் ஸ்ரீநிவாசன் மூர்த்தி பேசும்போது, “மூன்று வருடத்திற்கு மேலான உழைப்பு இப்படம். இப்படத்தில் நிறைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தியுள்ளோம். எனது டீம் முழு ஒத்துழைப்பு கொடுத்ததினால் இந்தப் படத்தின் vfx காட்சிகள் மிக அருமையான  வந்துள்ளன. இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி…” என பேசினார்.

Our Score