full screen background image

சென்னையில் ஏப்ரல்-2 முதல் 11 வரை ஐரோப்பிய திரைப்பட விழா..!

சென்னையில் ஏப்ரல்-2 முதல் 11 வரை ஐரோப்பிய திரைப்பட விழா..!

ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, சென்னை அலயன்ஸ் ஃபிரான்சைஸ், சென்னை கோதி இன்ஸ்டிடியூட், சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவை சென்னையில் தொடர்ச்சியாக  சர்வதேசத் திரைப்பட விழாக்களை நடத்தி வரும் இந்தோ சினி அப்பிரிசியேஷன் அமைப்புடன் இணைந்து 19-வது ஐரோப்பியத் திரைப்பட விழாவை சென்னையில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

backdrop Europe FilmFest

இந்த விழாவிற்கு ‘இளைஞர்களின் குரல்கள்'(Voices of Youth) என்று பெயரிடப்பட்டுள்ளது. பல வெளிநாட்டு பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகள் வென்ற 19  ஐரோப்பிய நாடுகளின் திரைப்படங்கள் அந்தந்த நாடுகளின் மொழியில் திரையிடப்பட்டாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டிலும் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ், ஹங்கேரி, செக் குடியரசு, பல்கேரியா, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவாகியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, அயர்லாந்து,  ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், லிதுவேனியா, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இத்திரைப்படங்கள், ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதிவரை அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் பில்டிங்கில் உள்ள திரையரங்கத்திலும், ஏப்ரல் 7 முதல் 11-ம் தேதி வரை மேக்ஸ்முல்லர் பவனில் இருக்கும் திரையரங்கத்திலும் திரையிடப்படவுள்ளன. இத்திரைப்படங்களை பார்க்க அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Voices of Youth – Schedule List

2-Apr-14 HUNGARY Inauguration by Hungarian Ambassador followed by the screening of the film Fresh Air (Friss Levegő) 6-00 pm Alliance Francaise de Madras

3-Apr-14 FRANCE Love Like Poison (Un Poison Violent) 6-00 pm AF

3-Apr-14 CZECH REPUBLIC Snowboarders (Snowboarďáci) 7-30 pm AF

4-Apr-14 UK Killing Bono 6-00 pm AF

4-Apr-14 BULGARIA Sneakers (Kecove) 8-00 pm AF

5-Apr-14 SLOVAKIA Love Me Or Leave Me (Miluj ma alebo odíď) 6-00 pm AF

5-Apr-14 PORTUGAL Hope is a strange place (A Esperança Está Onde Menos Se Espera) 7-30 pm AF

6-Apr-14 IRELAND Bright Vision (Aisling Gheal) 5-00 pm AF

6-Apr-14 NETHERLANDS Shocking Blue 7-00 pm AF

6-Apr-14 LUXEMBOURG Blind Spot (Doudege Wenkel) 8-30 pm AF

7-Apr-14 GERMANY Lessons Of A Dream (Der ganz große Traum) 6-00 pm Max Mueller Bhavan

7-Apr-14 FINLAND Garbage Prince (Roskisprinssi) 8-00 pm MMB

8-Apr-14 DENMARK Aching Hearts (Kærestesorger) 6-00 pm MMB

8-Apr-14 SPAIN Don’t Be Afraid (No tengas miedo) 8-00 pm MMB

9-Apr-14 LITHUANIA You am I (Aš Esi Tu) 6-00 pm MMB

9-Apr-14 ITALY Easy (Scialla) 7-30 pm MMB

10-Apr-14 BELGIUM On The Sly (A Pas de Loup) 6-00 pm MMB

10-Apr-14 AUSTRIA Breathing (Atmen) 7-30 pm MMB

11-Apr-14 GREECE The Brides (Νύφες) 6-00 pm MMB

Our Score