full screen background image

‘அமாவாசை’ நாயகனுக்கும், ‘பெளர்ணமி’ நாயகிக்கும் இடையேயான காதல்தான் ‘143’ திரைப்படம்..!

‘அமாவாசை’ நாயகனுக்கும், ‘பெளர்ணமி’ நாயகிக்கும் இடையேயான காதல்தான் ‘143’ திரைப்படம்..!

Eye talkies  என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் திரைப்படம் ‘143.’ 

காதலர்களுக்கு இனிப்பான வார்த்தையான ‘I LOVE YOU’ என்கிற வார்த்தைகளின் சுருக்கமே இந்த ‘143’ என்கிற தலைப்பாகும்.

இந்தத் தலைப்பு இதுவரை இன்றைய தலைமுறை இயக்குநர்களால் கண்டு கொள்ளப்படாமல் விட்டிருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

இந்தப் படத்தில் ரிஷி கதாநாயகனாக நடித்து, கதை எழுதி, இயக்கியிருக்கிறார். நாயகிகளாக பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்.

அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மற்றும் சுதா, ராஜசிம்மன், ‘பிதாமகன்’ மகாதேவன், நெல்லை சிவா, மோனா, ‘முண்டாசுப்பட்டி’ பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட்டும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – ராஜேஷ் ஜே.கே., இசை – விஜய் பாஸ்கர், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, அறிவுமதி, சினேகன், கபிலன், கலை – மணிமொழியன், சண்டை பயிற்சி – தீப்பொறி நித்யா, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு மேற்பார்வை – பிரபாகரன், தயாரிப்பு -சதீஷ் சந்திரா பாலேட், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரிஷி.

படத்தைப் பற்றி இயக்குநர் ரிஷி பேசும்போது, “அமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக்(ரிஷி). பெளர்னமி அன்று பிறந்த நாயகி மது.(பிரியங்கா ஷர்மா)இவர்கள் காதலுக்கு வில்லனாக சூரியன்(ராஜசிம்மன்). இப்படி மூன்று கதாபாத்திரங்களின் ஓட்டமே இந்தப் படத்தின் திரைக்கதையாக்கம். படம் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார்.

Our Score