மலையாளத்தில் ராகேஷ் கோபன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘100 டிகிரி செல்சியஸ்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
மலையாளத்தில் ஸ்வேதா மேனன் நடித்த கேரக்டரில் தமிழில் ராய் லட்சுமி நடிக்கிறார். மலையாளத்தில் ஸ்வேதா மேனன் டிவி சேனல் ரிப்போர்ட்டராக நடித்திருந்தார். ஆனால் தமிழில் அதனை ரேடியோ ஜாக்கியாக மாற்றியிருக்கிறார்களாம்.
மலையாளப் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த அனன்யா, மேக்னா ராஜ், நிகிஷா பட்டேல் ஆகியோர் தமிழிலும் அதே கேரக்டர்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சத்யநாராயணன் சூரியன், படத் தொகுப்பு – டான் மேக்ஸ், தயாரிப்பு – ஆர்.ஆர்.எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ், ராய்சன் வல்லாரா, எழுத்து, இயக்கம் – ராகேஷ் கோபன்.
5 இளம் பெண்கள் பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடி வேலைக்குச் சென்று வருகிறார்கள். ஒரு நாள் எதிர்பாராமல் அந்த விடுதியில் ஒரு கொலை நடந்துவிடுகிறது. கொலையாளி யார் என்ற கேள்வி ஆளாளுக்கு மண்டைக் குடைச்சலை ஏற்படுத்துகிறது.
இதைத் தெரிந்து கொண்ட ஒருவன் இவர்கள் 5 பேரையும் தனித்தனியே பிளாக் மெயில் செய்கிறான். இவனது டார்ச்சர் அதிகமான சூழலில் அந்தப் பெண்கள் இவனை என்ன செய்தார்கள்..? எப்படி தப்பித்தார்கள் என்பது திகிலும், திடுக்கிடலுமான திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ளது.
படம் மலையாளத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது..! இப்போது தமிழிலும் வெற்றிப் படமாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்..!