full screen background image

’10 எண்றதுக்குள்ள’ – ‘நானும் ரெளடிதான்’ வசூல் சேதாரமில்லையாம்..!

’10 எண்றதுக்குள்ள’ – ‘நானும் ரெளடிதான்’ வசூல் சேதாரமில்லையாம்..!

நேற்றைக்கு ரிலீஸாகியிருக்கும் ’10 எண்றதுக்குள்ள’ மற்றும் ‘நானும் ரெளடிதான்’ இரண்டு திரைப்படங்களுமே முதல் நாளில் மிகப் பெரிய வசூலை தொட்டிருக்கின்றன.

10 endrathukkulla-poster-1

’10 எண்றதுக்குள்ள’ திரைப்படம் 2 கோடியே 90 லட்சமும், ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் 2 கோடியே 16 லட்சத்தையும் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளே தெரிவித்துள்ளன. இந்த அளவுக்கு இருக்கலாம் என்று திரையரங்க வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. விடுமுறையிலும் பண்டிகை தினம் என்பதால்தான் இந்த அளவுக்கு கலெக்ஷனை தொட்டிருக்கிறது என்கிறார்கள். 

மற்றபடி சென்னை, கோவையைத் தவிர மற்ற இடங்களில் இந்த இரண்டு படங்களுமே தியேட்டர்களை ஹவுஸ்புல்லாக்கவில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் பக்கமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘நானும் ரெளடி’தான் திரைப்படம் நல்ல காமெடி என்பதால் நேற்றைய திரைப்படங்களில் முதன்மையாக இருக்கிறது. இனி வரும் நாட்களிலும் இதே அளவு வசூலை இந்தப் படம் அள்ளிவிடும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

அதே நேரம் விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ படமும் வரும் ஞாயிற்றுக்கிழமைவரையிலும் வசூலை அள்ளும் என்று அந்த டீமும் உறுதியாக நம்புகிறது..!

எப்படியோ இரண்டு படங்களுமே சேதாரமில்லாமல் தப்பித்தாலே தமிழ்த் திரையுலகத்திற்கு போதுமானது.

அதற்குள்ளாக போட்டி, பொறாமையினால் இந்த இரண்டு படங்களுக்கிடையேயும்  வசூல் வித்தியாசத்தைக் காட்டி வெளிவந்திருக்கும் விமர்சனங்கள் ’10 எண்றதுக்குள்ள’ டீமுக்கு பெரும் வருத்தத்தைத் தந்திருக்கிறது.

சந்தேகத்தைப் போக்குவதற்காக இன்று அவசரமாக தங்கள் தரப்பு செய்தியை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். 

அது இங்கே :

“First of all, we’ll like to thank the media fraternity for being with us and supporting us throughout the journey of 10 Endrathukulla.

There have been some debate on the collection nos. which have been shared. It’s a sincere request to all media personnel to check with a proper trade source or theaters themselves before commenting on the collections of our film versus any other film.
The brands involved in the film are of very high repute and stand by whatever information we share with media.

We have released a film which we all are very proud of, and with a lot of hard work and passion. We have had a wide release across all markets with about 650 screens in India, with most of the bigger screens and have had a fantastic opening..”

முதலில் திரைப்படத் துறையினர் அனைவரும் “நாம் எ்லலோருமே ஜெயிக்க வேண்டும். அனைவரின் படங்களுமே ஓட வேண்டும். அனைவருமே சகோதரர்கள்தான்…” என்ற அளவில் நட்புடன் இருந்தால்தான் இந்தத் துறை மென்மேலும் வளரும். 

இதில் எதற்கு போட்டிகளும், பொறாமைகளும்..!? இரண்டு படங்களுமே போட்ட காசை வசூல் செய்தால் நமக்கும் சந்தோஷம்தானே..?

Our Score