“இது வெளிநாட்டு காப்பியில்லை. சொந்தச் சரக்கு..” – இயக்குநர் தந்த உத்தரவாதம்..!

“இது வெளிநாட்டு காப்பியில்லை. சொந்தச் சரக்கு..” – இயக்குநர் தந்த உத்தரவாதம்..!

“இந்தியா-பாகிஸ்தான் ஒன் டே மேட்ச். இந்தியா பேட்டிங். கடைசி ஓவர். கடைசி பந்து மட்டுமே பாக்கி. அந்த கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி. விக்கெட் வீழ்ந்தால் பாகிஸ்தான் வெற்றி.. இருவருக்குமே வாழ்வா சாவா போராட்ட நேரம்..!

இந்த நேரத்தில்.. இந்த டென்ஷனில்.. டிவியை பார்த்துக் கொண்டிருந்த நமது படத்தின் ஹீரோ எதையோ செய்யப் போய் அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தோட கதை.. ஹீரோ என்ன செய்றாருன்றது சஸ்பென்ஸ்..” என்கிறார் இந்த ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ படத்தின் இயக்குநர் வீரா.

Rising Sun Film நிறுவனம் சார்பில் ஹெச்.என். கெளடா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வினய் கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹஸிகா தத் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் ஸ்ரீமன், சென்ராயன், லொள்ளு சபா ஜீவா, நந்தா சரவணன், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். உமேஷ் இசையமைத்திருக்கிறார். நா.முத்துக்குமார், சினேகன், ஹோசிமின் மூவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மிராக்கிள் மைக்கேல் சண்டை பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

“இதுவொரு horror கலந்த comedy படம்…” என்கிறார் இயக்குநர். “படத்தில் பேய் இருக்கிறது. ஆனால் அது ரொம்ப, ரொம்ப நல்ல பேய். வயலன்ஸ் இல்லவே இல்லை..” என்கிறார். “பேயை அரூபமாக காட்டப் போகிறீர்களா..?” என்று கேட்டபோது “இல்லை.. அது ஹீரோயினின் உடம்பில் உட்புகுந்து செய்கிற செயல்கள்தான் படமே…” என்கிறார்.

“இந்தப் படம் கமர்ஷியலான ஒரு திரைப்படத்தை போலவேதான் இருக்கும்.. இதில் காதலும் இருக்கிறது.. சஸ்பென்ஸும் இருக்கிறது.. அமானுஷ்யமும் இருக்கிறது.. திகிலை கூட்டி வைக்கும் இந்த பேய்தான் படத்தின் மிகப் பெரிய பலம்…” என்கிறார் இயக்குநர் வீரா.

கடைசியாக இவர் சொன்னதுதான் நம் நெஞ்சுக்கு நிம்மதியைத் தந்தது. இந்தப் படம் எந்தவொரு வெளிநாட்டு படத்தின் காப்பியும் கிடையாது.. சொந்தச் சரக்காம்..! நல்லது.. இனிமேல் எல்லா பிரஸ்மீட்லேயும் இயக்குநர்கள்கிட்ட இது பத்தி கேட்டு சத்தியம் வாங்கிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறோம்..!

Our Score